கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டும் இந்தியா

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 5 கோடியை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், கொரேனா தடுப்பூசியை பற்றி மக்களின் மனநிலையை அறியும்பொருட்டு உலக பொருளாதார மன்றமும் இப்சோஸ் நிறுவனமும் இணைந்து கருத்துக்கணிப்பில் இறங்கின.

இந்த கருத்துக்கணிப்பில், இந்தியர்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வமாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பல நாட்டினரும் தயக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 15 நாடுகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 10 நாடுகளில் தயக்கம் அதிகரித்து இருக்கிறது. இதில் சீனா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரேசில் போன்ற நாட்டினரிடம் அதிகமான தயக்கம் காணப்படுகிறது. அதேநேரம் இந்தியர்கள் எப்போது தடுப்பூசி வந்தாலும் போட்டுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here