ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது பாபாஸின் மலேசிய சமையல் நிகழ்ச்சி.

லேசியாவில் சமையல் மசாலா, பாரம்பரிய பலகார மாவு வகைகளின் முன்னணி விற்பனையாளரான பாபாஸ் நிறுவனம் மக்களைக் கவரும் அதே நேரம் பயன் அளிக்கக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 

அவ்வகையில் இந்நிறுவனம் புதிதாக பாபாஸின் மலேசிய சமையல் எனும் புதிய சமையல் நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளது. சுவாரஸ்யமிக்க இந்த நிகழ்ச்சி ஆஸ்ட்ரோவின் ஸ்டார் விஜய் 221 அலை வரிசையில் ஒளிபரப்பட்டவுள்ளது. 

அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணிக்கு இந்தச் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் ஸ்டார் விஜய் 221 அலைவரிசையிலேயே மறு ஒளிபரப்பு செய்யப்படும். 

விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷுடன் சிறப்பு விருந்தினராகச் சமையல் வல்லூநர் செஃப் ராம் இணைந்து இந்த நிகழ்ச்சியைப் படைக்கின்றனர். 

மேலும் புகழ்பெற்ற இந்தியக் கலைஞர்களான ரித்விகா, நாஞ்சில் விஜயன், மதுரை முத்து, நிஷா, எஸ்கே உடன் மலேசியக் கலைஞர்களான உதயா உள்ளிட்டோரும் இந்தச் சமையல் நிகழ்ச்சியில் பங்குபெறுகின்றனர். 

இதில் பாபாஸ் தயாரிப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மலேசிய உணவு வகைகள் பிரபலப்படுத்தப்படும். 32 பகுதிகளாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை மலேசிய மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழ்பவர்களும் கண்டுகளிக்கலாம். 

மேலும், அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பெருநாள் மட்டுமன்றி கிறிஸ்துமஸ், தைப்பூசம், பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு இந்த சமையல் நிகழ்ச்சி பிரித்தியோகப் பகுதியாக ஒளிபரப்பப்படும். 

மேல் விவரங்களுக்கு: பாபாஸ் தரப்பின் அதிகாரப் பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களை வலம் வாருங்கள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here