சினிமாவில் மீண்டும் பிசியாகும் நமீதா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நமீதா. கவர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா உடல் எடை ஏறியதால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர் எடையை குறைத்து திரும்பினாலும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் நடிப்பதை குறைத்து தீவிர அரசியலில் இறங்கினார்.

அ.தி.மு.க.வில் இணைந்தவர் அங்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் பா.ஜனதாவில் இணைந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி இருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் பவ் வவ் என்ற படத்தில் பிளாக்கர் வேடத்தில் நடித்து வருகிறார். திருவனந்தபுரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here