மஇகா உதவித்தலைவர் போட்டியில் டி.மோகன், டி.முருகையா, எம்.அசோஜன் ஆகியோர் வெற்றி

75ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட மஇகாவின் உதவித்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேற்று மாலை தேர்தல் நடைபெற்றது. 3 உதவித்தலைவர் போட்டிக்கு 6 பேர் போட்டியிட்டனர்.

அதில் டத்தோ மோகன் தங்கராசு 11,586 வாக்குகளும் டத்தோ முருகையா தோப்பசாமி 9,139 வாக்குகளும் டத்தோ அசோகன் 8,703 வாக்குகள் பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்தனர்.

மேலும் மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான 21 இடங்களுக்கு 60 பேர் போட்டியிட்டனர். குணசீலன் ராஜு, எம்.வீரன்,டத்தோ சுப்பிரமணியம் கருப்பையா, டி.தர்ம குமரன், செகு பாலா, பி.கமலநாதன்,கேஆர் பார்த்திபன், வின்சென்ட், தமிழ்வாணன் சுந்தரலா, எஸ்.சுப்பையா, மதுரவீரன் மாரிமுத்து, டத்தோ எஸ்.எம்.முத்து, அம்பாங் டத்தோ முனியாண்டி, டாக்டர் டி.நோவலன், சிவா ஜி, டத்தோ எம்.கருப்பண்ணன், சதாசிவம் காளிமுத்து, டத்தோ ஆர்.சுப்பிரமணியம், ஆர்.ராஜேந்திரன், ராமன் கோவிந்தன் நாயர், வழக்கறிஞர் ஆர்.டி.ராஜா ஆகிய 21 பேர் வெற்றி வாகை சூடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here