குமரியில் 3 நாட்களில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதுபானங்கள் விற்பனை நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள், விழாக்காலங்கள், பண்டிகை கால விடுமுறை தினங்கள் போன்றவற்றில் வழக்கத்தைவிட மதுபானங்கள் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.

அதாவது சாதாரண நாட்களில் ரூ.2½ கோடிக்கு விற்பனையாகும் மதுபானங்கள், விழாக்காலங்கள், பண்டிகை கால விடுமுறை தினங்களில் ரூ.4 கோடி வரையிலும், அதற்கு மேலும் விற்பனை நடைபெறும்.

இந்தநிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 13-ந் தேதியில் (வெள்ளிக்கிழமை) இருந்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. 14-ந் தேதி தீபாவளி பண்டிகை, 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். இந்த 3 நாட்களிலும் மது விற்பனை அமோகமாக இருந்தது. தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிடும் வகையில் கடந்த 13-ந் தேதியே மதுபான பிரியர்கள் தங்களுக்கு தங்களுக்கு தேவையான மதுபானங்களை பெட்டி, பெட்டியாக வாங்கிச் சென்றனர்.

தீபாவளி பண்டிகை தினத்தன்றும், நேற்றும் மதுபான பிரியர்கள் கூட்டம் டாஸ்மாக் கடைகளில் அதிகமாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரூ.3 கோடிக்கும், சனிக்கிழமை 3½ கோடிக்கும், நேற்று ரூ.4 கோடிக்கும் என மொத்தம் ரூ.10½ கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கத்தைவிட இந்த 3 நாட்களில் ரூ.3 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. பீர் வகைகளைவிட, மதுபான வகைகள்தான் அதிகம் விற்பனையானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு மாற்றப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்றும், அதேபோல்தான் கடந்த 2 நாட்களாக நாகர்கோவில் சிறையில் இருந்து பாளையங்கோட்டை சிறைக்கு கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here