வீட்டிலேயே கொரோனா சோதனை – 30 நிமிடங்களில் பதில்!

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உலக நாடுகள் கொரோனாவுடன் போராடி வருகின்றன. அதனை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டும் கொரோனா ஒழிந்த பாடில்லை. மக்கள் தங்களை தானே காத்துக் கொண்டால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டதால், மக்கள் கொரோனவுடன் வாழ பழகிவிட்டனர்.

இந்த நிலையில், 30 நிமிடங்களில் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் கருவிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் வருவதற்கு சில நாட்கள் ஆவதால், அதற்குள்ளாக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் தொடர்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததன் முக்கிய காரணம் இதுவே. அதனால் தற்போது 30 நிமிடங்களில், கொரோனாவை கண்டறியும் கையடக்க சோதனை கருவிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்த லூசிரா ஹெல்த் என்ற நிறுவனம் கண்டுபிடித்த இந்த கருவிகு அமெரிக்க அரசு அனுமதி கிடைதிருக்கிறது. அந்த கிட்டில் இருக்கும் டெஸ்டிங் யூனிட்டில் சளி மாதிரியை வைத்தால் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரிந்துவிடும் என்றும் 14 வயதுக்கு மேற்பட்டோர் இந்த டெஸ்டை வீட்டிலேயே எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here