உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு செலுத்தப்படவுள்ளது

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த 1987இல் உருவாக்கியது. எனினும் அந்த தடுப்பூசியின் செயற்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019இல் இருந்து கானா, கென்யா, மாலாவி ஆகிய நாடுகளில் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு உலக சுதாகார அமைப்பு நேற்று ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து, முதல் முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் ‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்’ என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் Tetros Adanom கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here