எல்லா இந்தியர்களுக்கும் எப்போது கோவிட் தடுப்பூசி போடப்படும் என்பது உள்பட 4 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதையும் அலற வைத்து கொண்டிருக்கும் தொற்று நோயான கொரோனா வைரசுக்கு பல மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர்.
சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் கடைசி கட்ட சோதனையில் உள்ளன. சோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்து வருகின்றன. வரும் டிசம்பரில் கொரோனா தடுப்பூசி முதலில் அமெரிக்காவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி கிடைத்தவுடன் யாருக்கெல்லாம் முதலில் போட வேண்டும் என்று இப்போதே மத்திய அரசு திட்டமிட தொடங்கி விட்டது.