நாகர்கோவில்:
மணமகளும், வருங்கால வாழ்க்கையை நினைத்து பூரிப்பில் இருந்தார். திருமண தேதியும் நெருங்கியது. நேற்றுமுன்தினம் சம்பிரதாயப்படி திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்தன. மணமகளின் பெற்றோர், திருமணம் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்று உற்சாகமாக விருந்தோம்பல் பணியில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் மணமகளுக்கு அதிர்ச்சிதரும் செய்தி வந்தது. அதாவது வெளியே சென்று வருவதாகக் கூறி வீட்டை விட்டு சென்ற மாப்பிள்ளையை காணவில்லை என்ற செய்திதான் அது.
அதன்பிறகு தான், திருமணம் பிடிக்காமல் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. இதனால் பல கனவுகளில் இருந்த மணப்பெண், உடைந்து போனார். அதே சமயத்தில் இருவீட்டாரிடையே ஒருவித சலசலப்பும் ஏற்பட்டது.
மாப்பிள்ளையின் இந்த திடீர் முடிவால் நேற்று நடக்க இருந்த திருமணமும் நின்று போனது. பெண் வீட்டார் தரப்பில் முறைப்படி போலீசிடம் புகார் கொடுக்காததால், போலீசாரும் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை.
மணமகன் ஒருவரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்வதற்காகத்தான், பெற்றோர் பார்த்த பெண்ணை தவிக்க விட்டபடி பாதியிலேயே சென்றதாகவும் கூறப்படுகிறது.








