மலாக்கா:
கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கத்தைத் தொடர்ந்து மாநிலத்தில் இயங்கும் 216 – முச்சக்கர சைக்கிள் ஓட்டுநர்களுக்கு, அவர்களின் சுமையை குறைக்க உதவும் வகையில் மலாக்கா அரசு ஒரு முறை வெ.200 வழங்க விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சமூக பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) கீழ் சுய வேலைவாய்ப்பு சமூக பாதுகாப்புத் திட்டத்தில் (எஸ்.கே.எஸ்.பி.எஸ்) பங்களிக்கும் முச்சக்கர சைக்கிள் ஓட்டுநர்களுக்கு வெ.43,200 தொகையை சலுகையாக வழங்கப்படும் என்று முதல்வர் Dato sri சுலைமான் முகமட் அலி தெரிவித்தார்.
ஏப்ரல் 1 ஆம் நாள் ப்ரிஹாடின் ராக்யாட் பொருளாதார தூண்டுதல் தொகுப்பின் கீழ் மத்திய அரசால் வழங்கப்பட்ட 600 வெள்ளி ஒரு முறை செலுத்தியதைத் தொடர்ந்து இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்றார் அவர்.
“தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் முச்சக்கர ஓட்டுநர்கள் மலாக்காவில் 53 விழுக்காடாக இருக்கின்றனர். முச்சக்கர சைக்கிளில் சவாரி செய்வது அலாதியானது. அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை மட்டுமே சார்ந்துள்ளது அவர்களின் வாழ்வாதரம் என்று அவர் இங்குள்ள மலாக்கா மியூசியம் கார்ப்பரேஷன் ஆடிட்டோரியத்தில் ஊக்கத்தொகை, உணவு ஆகியவற்றை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார் .
இது தவிர, அக்டோபர் 1 முதல் 216 முச்சக்கர ஓட்டுநர்களுக்கு எஸ்.கே.எஸ்.பி.எஸ் பங்களிப்பிற்காக, மாநில அரசு 33,000 வெள்ளியை உதவி நிதியாக ஒதுக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.