இரு பிரமாண்ட படங்களின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள் ஷுட்டிங்..

கன்னடத்தில் மட்டுமின்றி ‘டப்’ செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வெற்றியை பெற்ற ‘கே.ஜி.எஃப்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘கே.ஜி.எஃப் -2’ என்ற பெயரில் பிரமாண்டமாய் தயாராகி வருகிறது.

யஷ் கதநாயகனாக நடிக்க, இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக ‘ஆதிரா’ என்ற சக்தி வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறார். இதன் கிளைமாக்ஸ் காட்சிகள் ஐதராபாத்தில் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

இதுபோல் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளும் ஐதராபாத் பிலிம் சிட்டியில் படமாக்கப்படுகிறது.

ஜுனியர் என்.டி.ஆர்., ராம்சரண், அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ராம்சரண் ஜோடியாக பிரபல இந்தி நடிகை அலியாபட் நடிக்கிறார். அலியா, நடிக்கும் முதல் தெலுங்குப்படம் இது.

சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த உண்மைக்கதையை படமாக்கும் ராஜமவுலி, இப்போது கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்து வருகிறார்.

நேற்றைய படப்பிடிப்பில் அலியாபட் கலந்து கொண்டு, ஷுட்டிங்கில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதன் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு 6 நாள் மட்டுமே அலியாபட் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here