குளுவாங் அருகே நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் ஒருவர் பலி

குளுவாங்: வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 61.4 கிலோமீட்டரில் (வடக்குபக்கம்) பகுதியில் நேற்று இரவு நடந்த நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்பு துறை செயல்பாட்டு தளபதி II அப்துல் ரஹீம் ரசாலி இது பற்றிக்கூறுகையில், நேற்று இரவு 8.10 மணியளவில் நடந்த விபத்தில், பலியான மோட்டார் வண்டி ஓட்டுநர் முகமட் அஸ்வான் இஸ்மாயில்( 42) என அடையாளம் காணப்பட்டார்.

மோட்டார் வண்டி ஓட்டுநரான அவர் சம்பவ இடத்திலேயே பலியானார், மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தார். ஏனைய இரண்டு வாகன ஓட்டிகள் காயமின்றி தப்பினர்.

“ஜோகூர் மாநில செயல்பாட்டு மையம் MERS999 துரித அழைப்பு வழியாக மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததாக கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பை தொடர்ந்து, ஒன்பது பணியாளர்களுடன் ரெங்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

“சம்பவ இடத்திற்கு வந்தவுடன், ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது, கிட்டத்தட்ட அது முழுவதுமாக எரிந்து விட்டிருந்தது.

“இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு யமஹா Yl5 மற்றும் ஒரு Yamaha RXZ, மற்றும் இரண்டு கார்கள், ஒரு Perodua Viva மற்றும் ஒரு Perodua Bezza ஆகியவை அடங்கும்.

“காயமடைந்த யமஹா Y15 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது, ​​அந்த இடத்திலிருந்த சுகாதார அமைச்சின் பணியாளர்களால் RXZ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் இன்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here