மனைவியின் கோபத்தால் 36 ஆயிரம் அபராதம் கட்டிய கணவன்!

மனைவியின் கோபத்தினால் 450 கிலோ மீட்டர் நடந்தே சென்றதோடு அல்லாமல், போலீசாரிடமும் 36 ஆயிரம் அபராதம் கட்டியிருக்கிறார் கணவன்.

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் சற்று குறைந்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆவது அலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13, 720 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 528 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. மீண்டும் அங்கே பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுமுடக்கம் காலத்தில் வீட்டை விட்டு வெளியேறினால் நம்மூர் மதிப்பில் 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மனைவி தன் மீது கோபப்பட்டார் என்பதற்காக அவருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவன், ஆத்திரத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் நடந்து சென்றிருக்கிறார்.

பொதுமுடக்கத்தால் போக்குவரத்து இல்லாததால், ஒரு கிலோ மீட்டர் ரெண்டு கிலோ மீட்டர் அல்ல. அப்படியே 450 கிலோ மீட்டர் நடந்தே சென்றுவிட்டார். ஒருநாளைக்கு 65 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றிருக்கிறார்.

இதைக்கவனித்துவிட்ட இத்தாலி போலீசார் அவரை பிடித்து, 36 அயிரம் ரூபாய்( இந்திய மதிப்பில்) அபராதம் விதித்தோடு, அவரை வீட்டிலும் கொண்டு வந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here