மத போதகர் ஜாகிர் நாயக் மீது எந்த புகாரும் பெறவில்லை – ஜஜிபி தகவல்

கோலாலம்பூர்: இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் குறித்து மலேசிய காவல்துறைக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ புகாரும் கிடைக்கவில்லை என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டான் ஸ்ரீ அப்துல் ஹமீத் படோர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்த தகவல்களைப் பகிர்வதை போலீஸ் படை வரவேற்பதாகவும், பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு வளர்ச்சியையும் எப்போதும் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கெல்லாம், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள்வதில் வெளிநாடுகளில் உள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களிடமிருந்து நாங்கள் எப்போதும் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளோம்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

எந்தவொரு பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் கையாள்வதில் காவல்துறைக்கு நல்ல பதிவு இருப்பதாக அப்துல் ஹமீத் கூறினார்.

அந்த நாட்டில் ஒரு நகரத்தில் பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் போதகருடன் தொடர்புடைய பண பரிவர்த்தனையை இந்தியாவின் உளவுத்துறை தடுத்து நிறுத்தியதாக டைம்ஸ் ஆப் இந்தியா நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களுக்குள் ஒரு பெண் தலைமையிலான குழு இந்த தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், கோத்தா பாருவில் ஒரு உரையின் போது ஜாகிர் சர்ச்சையை எதிர்கொண்டார். அங்கு அவரது கருத்துக்கள் மலேசிய சீனர்களையும் இந்துக்களையும் தூண்டிவிட்டன.

சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக தனது அறிக்கையை வழங்க புக்கிட் அமானுக்கு அவர் பல முறை அழைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here