விண்வெளி செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும் ‘இந்திய வம்சாவளி’ ராஜா

விண்வெளிக்குச் செல்வது என்பது அதன் துறை சார்ந்த ஒவ்வொருவரின் கனவு. வானம் என்றைக்குமே தேடத் தேட புதையல் கிடைத்துக்கொண்டே இருக்கும் அற்புத வெளி.
அதில் ஆராய்ச்சி செய்யவும் புதிய விஷயங்களைக் கண்டறியும் லட்சக்கணக்கான அறிவியளாலர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

விண்வெளி ஆய்வு என்றாலே நம் நினைவில் வருவது நாசா விண்வெளி ஆய்வு மையம்தான். இதில் 2021 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது.

இந்தத் திட்டத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் குரு3 என்று பெயரிட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு செல்லும் நபர்களில் இந்திய வம்சாவளியினரான ராஜா ஜான் சாரி என்பவரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ராஜா சாரி, விஸ்கொன்சின் மாகாணத்தில், 1977 ஆம் ஆண்டில் பிறந்தவர். கொலம்பஸ் ஹைஸ் ஸ்கூலில் படித்தவர். விண்வெளித் துறையில் பொறியியல் பட்டம் வென்றவர். விண்வெளிக்குச் செல்வதற்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி எடுத்தவர்.

தற்போதைய நிலவரப்படி, ராஜா சாரி 2021 அக்டோபர் நவம்பர் மாதத்தில் செல்லும் பயணத்தில் செல்கிறார். இவரோடு இன்னும் 2 விண்வெளி வீரர்களும் செல்கின்றனர். இதன் வெற்றி வாய்ப்பைப் பொறுத்து, ராஜா நிலவுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் விரிவடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here