சென்னை டிடிகே சாலையில் அதிகாலை சைக்கிளிங் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் கடந்த 2ஆம் தேதி விலையுயர்ந்த செல்போன் பறிக்கப்பட்டது.
இதுகுறித்து நடிகர் கவுதம் கார்த்திக் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் சைக்கிளிங் செய்த நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூர் குயில்தோட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், பெரும்பாக்கத்தை சேர்ந்த சரத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு செல்போனை விலைக்கு வாங்கியதாக ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பைருஸ்கானையும் போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நடிகர் முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான நடிகர் கவுதம் கார்த்திக் கடல், இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.