மணிக்கு 500 கி.மீ வேகம் – உலகின் அதிவேகக் காரின் விலை என்னவாம்?

பயணம் என்றாலே காரில்தான் என்ற மனநிலையில் இருப்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், நமக்கான ஷெட்யூலை நாமே முடிவெடுக்கலாம். குறிப்பிட்ட இடத்திற்கு வேகமாகச் செல்லலாம். இதுவும் வேகமான கார் பற்றிய செய்திதான்.

உலகின் அதிவேக கார் என்றழைப்படும் கார் ஹென்னஸி வெனோம் F5 (Hennessey Venom F5) இங்கிலாந்தில் சோதனை செய்து இயக்கப்பட்டிருக்கிறது. இதன் வேகம் அதிகமில்லை, மணிக்கு 500 கிலோ மீட்டர்தான். என்ன நினைத்துப் பார்க்கவே மயக்கம் வருகிறதா?

ஆம். உலகின் அதிகவேகக் கார் என்றால் சும்மாவா? இதன் வேகம் மணிக்கு 420 லிருந்து 512 என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து மதுரையே 462 கிலோ மீட்டர்தான்.

ஹென்னஸி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த F5 மாடல் மீது உலகின் கார் பிரியர்களின் கண் விழுந்திருக்கிறது. இதன் எடை 1,355 கிலோகிராம். இதன் என்ஜின் டைப் twin-turbocharged வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதெல்லாம் சரி, இதன் விலை எவ்வளவு என்பதுதானே அடுத்த கேள்வி? அமெரிக்கா டாலர் மதிப்பில் 1.6 மில்லியன் அதாவது 16 லட்சம் டாலராம். இந்திய மதிப்பில் 11.75 கோடி ரூபாய் வந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here