அதிக ஆபத்துள்ளவர்கள் முதலில் கவனிக்கப்பட வேண்டும்- டாக்டர் லாய் குவாங் சோய்,

கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெறறுகின்றவர்க்ள் முதலில் யாராக இருக்க  வேண்டும் என்பது உலகளவில் பரபரப்பாக விவாதிக்கப்படும் ஒரு பிரச்சினையாகியிருக்கிறது.

ஆனால், தடுப்பூசிகளைப் பெறுவதற்கு முன்னணி சுகாதார ஊழியர்கள், அதிக ஆபத்துள்ளவ்வர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறார்கள்.

அத்தகைய முன்னுரிமையை வழங்குவதில், குடும்ப மருத்துவரான டத்தோ டாக்டர் லாய் குவாங் சோய், எல்லாவற்றிற்கும் மேலாக, தடுப்பூசியின் நோக்கம், அதிக ஆபத்துள்ள குழுக்களை, குறிப்பாக நோயினால் இறப்பை எதிர்நோக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களைப் பாதுகாப்பதே முதன்மையாகும்  என்றார் அவர்.

மற்ற நாடுகளைப் பார்த்தால், அதிக ஆபத்துள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மருத்துவ முன்களப்பணியில் இருப்பவர்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது,

அதன்பிறகு நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவுடன் சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தில் உள்ளவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று வெளியிடப்பட்ட  அறிக்கையில், மலேசியாவில் பதிவான கோவிட் -19 வழக்குகளில் பெரும்பான்மையானவர்கள் 40, 50 வயதிற்குட்பட்டவர்கள் என்று லாய் குறிப்பிட்டார்.

இந்த வயதிற்குட்பட்ட மக்களிடையே மிக அதிகமான இறப்பு விகிதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை பதிவுகள் காட்ட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here