சிறுவர் மருத்துவமனையிலும் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று

இலங்கை-

இலங்கையில் கொழும்பு பொரளை சிறுவர் மருத்துவமனையில் தினமும் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுவதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் ஜி.விஜேசூரிய தகவல் தெரிவித்துள்ளார்.

இப்போது வரை 70 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த மருத்துவமனையில் தினமும் 5 பேருக்கு என்ற வகையில் கொரோனா தொற்று உறுதியாகி வருவதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here