அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு சம்மன்!

அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன் பல்கலை. சிறப்பு அந்தஸ்து குறித்து அவர் தமிழக அரசின் ஒப்புதல் பெறாமலே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைத்தது. ஆனால் சூரப்பாவுக்கு எதிராக குழு அமைத்தது நியாயமற்ற நடவடிக்கை எனவும் விசாரணையை முடித்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. துணைவேந்தர் மீதான புகார்களை விசாரித்து வரும் 28 ஆம் தேதி உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு வெங்கடேசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணங்களை முழுமையாக ஒத்துழைக்காததால் நேரில் ஆஜராகுமாறு அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here