அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு விமானங்களில் சமீப காலமாக கிலோ கணக்கில் தங்கம் கடத்தி வருவதும், அவற்றை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடந்துவருகிறது.
இந்நிலையில் நேற்றுக் காலை துபாயில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் திருச்சிக்கு வந்தது.
அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்ரசாக்(40) என்ற பயணி தனது சட்டையில் 1 கிலோ 173 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுபோல் சிங்கப்பூரில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானத்தில் திருச்சிக்கு வந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன்(34) தனது சூட்கேசில் 249 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரிடம் இருந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.73 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.