திம்பு-
பூட்டான் நாட்டிலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களுக்கு இடையேயான இயக்கங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் திம்பு, பாரோ , லாமொய்ஜிங்கா உள்ளிட்ட நகரங்களில் புது வகை கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், உள்ளூரில் புதிய வகை கொரோனா பரவலுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதனால் கடுமையான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என முடிவானது.
எனவே டிசம்பர் 23- ஆம் தேதியில் இருந்து 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.
கால்நடை தீவனம் உள்பட சரக்குகள், காய்கறிகள், பிற அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் இடையூறுகள் இருக்காது எனவும் அதற்குரிய அமைப்புகள் உறுதி செய்யும்.