தனியாக சிக்கிய பெண் – நாய்களிடம் பட்ட கொடுமை

 ரஷ்யா-

தனியாக சிக்கிய இளம் பெண் ஒருத்தியை  தெரு நாய்க்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியது . இதனால், முகம் சிதைந்த அவள்  குற்றுயிராக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட குறித்த பெண்ணின் உயிரை காப்பாற்றும் நோக்கில் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

ரஷ்யாவின் Ulan-Ude நகரிலேயே  இக்கக்ச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது தனியாக சிக்கிய 20 வயதேயான Tatyana என்பவர் வெறிகொண்ட தெருநாய்களால் கொடூரமாகத் ததாக்கப்பட்டுள்ளார்.

உறையவைக்கும் குளிரில் இவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் குடியிருக்கும் சிலர், நாய்களைத் துரத்தியதுடன், அவரை மீட்டு குடியிருப்பு ஒன்றில் பத்திரப்படுத்தியதுடன், அவசர உதவிக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tatyana-வின் முகம் மொத்தமாக சிதைந்து போயுள்ளது. சதைப்பகுதி மொத்தமும் பறிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, உடல் முழுவதும் நாய்கள் கடித்துக் குதறியுள்ளன.

Tatyana தற்போது அடையாளம் காண முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு தற்போது மருத்துவ ரீதியான கோமா நிலையில் வைத்து சிகிச்சை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து சுமார் 10 நாய்களைச் சுட்டுகொன்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கொல்லப்பட்ட நாய்கள் ஏற்கனவே ஏதேனும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tatyana தொடர்பில் தகவல் வெளியிட்ட மருத்துவர்கள், சேதத்தின் சதவீதம் மிக அதிகம். அவரது இரத்த அழுத்தம் மிகவும் குறைவு என தெரிவித்துள்ளனர்.

Tatyana-வை நாய்களிடம் இருந்து காப்பாற்றிய பெண் ஒருவர் தெரிவிக்கையில், ஒரு அலறல் சத்தம் கேட்டது. நான் வெளியே என்று பார்க்கும் போது, நாய்களிடம் சிக்கி ஒருவர் போராடுகிறார்.

நாய்களை துரத்திவிட்டு, அருகே சென்று பார்த்த போது, உடல் முழுவதும் காயங்களுடன், உடைகள் பறிக்கப்பட்டு நிர்வாணமாக, ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here