பொங்கல் பண்டிகை நாளில் கால்நடைகளை அலங்கரிக்க நெட்டி மாலை

திருவாரூர்-

 

பொங்கல் விழாவையொட்டி திருவாரூர் அருகே நாரணமங்கலத்தில் கால்நடைகளுக்கான நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையானது தமிழர் திருநாளாக நாடு முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்வது, வர்ணம் தீட்டுவது போன்ற பணிகளை மேற்கொள்வர்.

இதுமட்டுமன்றி பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகையன்று வீட்டில் இருந்து வரும் தேவையில்லாத பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்துவதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர். இந்த பொங்கல் பண்டிகைக்கு பின் தங்கள் விவசாய பணிகளுக்கு பயனுள்ளதாக இருந்த எருதுகளுக்கும் கால்நடைகளுக்கும் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மற்ற பண்டிகைகளை விட இந்த பண்டிகையானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி தாய், தந்தை மற்றும் உறவினருடன் ஒன்றாக பொங்கலிட்டு வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், மறுநாள் (15 ஆம் தேதி) திருவள்ளுவர் தினமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி உழவர்கள், பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு பொங்கலிட்டு படைக்கும் இந்த நாளையொட்டி கால்நடைகளுக்குத் தேவையான நெட்டி மாலைகள்,  பூ மாலைகள் அணிவித்து மகிழ்வது வழக்கம்.

இந்த நெட்டி மாலைகளை விதவிதமாக தயாரிக்கும் பணி திருவாரூர் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் மும்முரமாக நடந்து வருகிறது.

நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்களது வீடுகளிலேயே தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு கலர் கலராக இவற்றைச் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here