தமிழ்ப் 366 மாணவர்களுக்கு  பள்ளி உபகாரணங்கள் -வீரப்பன் வழங்கினார்

ரெப்பா, டிச.31-
2021 புதிய ஆண்டில் மீண்டும் பள்ளிக்கு திரும்பும் ரெப்பா சட்டமன்ற தொகுதியிலுள்ள பி40 குடும்பங்களைச் சார்ந்த சுமார் 366 மாணவர்களுக்கு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம்  பள்ளி உபகாரணப் பொருட்களை நேரடியாக வழங்கினார்.
ரெப்பா சட்டமன்ற மக்கள் சேவை மையம் ஏற்பாட்டில் மீண்டும் பள்ளிக்கு போகலாம் நிகழ்ச்சியின் மூலமாக இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக கூறிய நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர், மாணவர்களுக்கான பள்ளி சீருடைகள், காலணி, புத்தகப்பை, எழுத்துக்கோல் போன்று அனைத்தும் உள்ளடக்கிய பொருட்கள் வழங்கப்பட்டதாக வீரப்பன் குறிப்பிட்டார்.
இத்தொகுதியைச் சார்ந்த தமிழ்ப்பள்ளி, தேசியப்பள்ளி, சீனப்பள்ளி ஆகிய பள்ளி மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தம்பின் பெர்டானா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தம்பின் மெக்டோனால் உணவு மையம் 100 பள்ளிப் புத்தகப் பைகளை அன்பளிப்பாக மாணவர்களுக்கு வழங்கியதைக் குறிப்பிட்டார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி உயர்வுக்கு ஆற்ற வேண்டிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், கல்வி ஒன்றே சிறந்த சொத்தாக வழங்கக்கூடிய பொறுப்பு பெற்றோர்களுக்கானது என வீரப்பன் குறிப்பிட்டார்.
                                                                                 நாகேந்திரன் வேலாயுதம்
Attachments area

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here