மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தேசிய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசாங்கம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தலைவர்கள் சுவராஜ் அபியன், யோகேந்திர யாதவ் ஆகியோர் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக டிராக்டர் பேரணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று தெரிவித்தனர். மேலும் வருகிற 28-ஆம் தேதி பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக அரியானாவில் உள்ள ஒவ்வொரு விவசாயும் டிராக்டர்களுடன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.