எனக்கு கொரோனா உள்ளது – பிரபல நடிகை

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்த அவர், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில். அனுசுயா தனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதனால் கர்னூலில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்ல இருந்த எனது பயணத்தை ரத்து செய்து விட்டேன்.

தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ள இருக்கிறேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here