தற்கொலைகள் தொடர்கதையாகிவிடக் கூடாது!

 

கொரோனா என்பது கொடிய, மரண நோயாக விரட்டிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மக்களின் மனநலம் வெகுவாகப்பாதிபடைந்திருக்கிறது என்பதை பாதுகாப்பான சமுதாய ஒருங்கிணைப்பின் தலைவர் டான்செரி லீ லாம் தை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மலேசியர்கள் மட்டும் அல்ல, உலகத்தின் ஒட்டு மொத்த மக்கள் அனைவரும் மன நல பாதிப்பில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனாலும் அவரவர் நிலைமைக்கு ஏற்ப விழுக்காடுகள் மாறுபட்டிருக்கின்றன . இதில் ஆபத்தான நிலைக்கு விகிதாச் சாரங்கள் உயராதவரை வெளியில், வெளிபடையாக இதன் பாதிப்பு  தெரிவதில்லை. 

கோவிட் காலத்திற்கு முன்பும் மன அழுத்தங்கள் அதிகமாகவே இருந்தன. அப்போதெல்லாம் அது ஒரு பொருட்டாக இல்லை. தேவைக்கு ஏற்பவே மருத்துவம், அதற்கான அலோசனைகள் வழங்கப்பட்டன. 

கொரோனாவுக்குப் பிந்தைய காலம். அல்லது இப்போதைய நடைமுறையில், மன அழுத்தம் என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது என்பதை  லீ  சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கடந்த ஆண்டில் மன அழுத்தத்தின் விளைவு பல மரணங்களைப் பதிவு செய்திருக்கின்றன . அப்போதே எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அப்போது அது காதில் விழவில்லை.

அதன் விளைவுகள் இப்போது அதிகமாகி வருகின்றன. இதற்கு கொரோனா அல்லது தொற்று அச்சம், அதனால் ஏற்பட்டுவரும் இழப்புகளும் காரணங்களாக இருக்கின்றன.

இதைத்தான்  லீ அழுத்மாகவே எச்சரித்திருக்கிறார். இதை கவனிக்காது விட்டால் தற்கொலைகள் அசாதாரணமாகிவிடும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.

அதனால், மனநல மருத்துவம் சார்ந்தவர்கள் இனி காத்திருப்பது என்பது சரியானதாக இருக்காது. மன இறுக்கத்தால் பாதிப்புறும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அவர்களாகவே முன்வந்து வைத்தியம் பார்ப்பது என்பது  எப்போதும் சாத்தியமானதல்ல. இதற்கு சுயநலம் தடையாக இருக்கும்.

மன அழுத்தம் உள்ளவர்கள் அடையாளம் காணுப்பட தொடர் கண்காணிப்பு வேண்டும். அப்போதுதான் தற்கொலைகள் நடவாமல் பார்த்துக்கொள்ளமுடியும்.

இதற்கு நட்பு வட்டம், அண்டைவீட்டார், சமூக நல இயக்கண்கள் தகவல் அளிப்பவர்களாக மாறவேண்டும். அதற்குத்தேவை ஆலோசனையும் தீர்வும் வழங்கும் மன நல மருத்துவம்.

தற்போதைய நிலையில் அரசின் ஆதரவு திருப்திகரமாக இல்லை என்பதாகவே உணர்ப்படுகிறது. 

மன நல ஆலோசகர்கள் எப்போதுமே   இயக்கப்படக்கூடாது. அவர்கள் தானாக இயங்குகின்றவர்களாக இருக்க வேண்டும்.

கோலாலம்பூரில் நட்பு இயக்கம் இதனைச் சேவையாகச் செய்து வருகிறது. இதேபோல் கூடுதல் இயங்கங்கள் சேவையாகச் செய்ய முன் வரவேண்டும்.

இதுபோன்ற தன்னார்வ  இயக்கங்களுக்கு அரசாங்கம், மருத்துவப்பிரிவு. அதன் உட்பிரிவுகள் துணையாக இருக்கலாம்.

இதனால் தொடர்கதையாகும் தற்கொலைகள் தடுக்கப்படும்.  

                                                                                                                    கா.இ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here