பிறந்த நாளில் வாளால் கேக் வெட்டிய நடிகர் விஜய் சேதுபதி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி, தனது பிறந்த நாளை முன்னிட்டு, நீண்ட வாளால், பிறந்த நாள் கேக்கை சிரித்தபடி வெட்டுகிறார்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு முன்னணி நடிகர் இப்படி வெட்டுவது சரிதானா? போலீசார் இவர் மீது நடவடிக்கையை எடுப்பார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நேற்று அவருக்கு இன்று 43   ஆவது பிறந்த நாள் . அதை முன்னிட்டு, நீண்ட வாளால், மேஜையில் வைக்கப்பட்டு இருக்கும் பிறந்த நாள் கேக்கை சிரித்தபடி அவர் வெட்டியிருக்கிறார் .

அப்போது அருகில் இயக்குநர் பொன்ராம் சிரிக்கிறார். மேலும் சிலரும் அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர் .

இந்த கேக் வெட்டும் இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

கமெண்ட்: வாள் கொண்டு கேக் வெட்டுவது வீரத்தின் அடையாளம். இங்கு யார் தலையையயும் வெட்டும் அறிகுறி இல்லை. கேக் வெட்டுவது தமிழனின் பழக்கமும் அல்ல. அதனால் இது ஒரு பொருட்டல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here