பச்சை திராட்சையின் பயன்கள்

சிவப்பழகை ஜொலிக்கச் செய்யும் தன்மையும் பச்சை திராட்சைக்கு உண்டு. ஆரஞ்சு பழத் தோலை உலர்த்தி பவுடராக்குங்கள். ஒரு டீஸ்பூன் இந்தப் பவுடருடன், ஒரு டீஸ்பூன் திராட்சை ஜுஸ் கலந்து முகம் ,  கழுத்துப் பகுதிகளில் பூசி கழுவுங்கள். இப்படிச் செய்வதால் தோலின் முரட்டுத்தன்மை நீங்குவதுடன் நிறமும் கூடும்.
அழகுக்கு ஆதரவு தருவதில் காய்ந்த திராட்சைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. காய்ந்த திராட்சையுடன், பீட்ரூட் சாறை கலந்து தினமும் உதடுகளில் பூசி வர, உதடுகள் கோவைப்பழம் போல சிவக்கும்.

காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவினால், ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிக்கும்.

சருமத்தை மிருதுவாக்கி பொலிவடைய வைக்கிறது பச்சை திராட்சை. தினமும் 4 பச்சை திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here