ஜோகூரில் சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்த மின்சார கார் காட்சியறை உரிமமின்றி இயங்கியதா?

கோலாலம்பூர்:

கடந்த டிசம்பர் 31 அன்று தீ விபத்துக்குள்ளான ஜோகூரிலுள்ள மின்சார வாகன சார்ஜிங் சிஸ்டம்ஸ் (EVCS) கொண்ட கார் காட்சியறை எரிசக்தி ஆணையத்தின் (ST) உரிமம் இல்லாமல் இயங்கியது கண்டறியப்பட்டுள்ளது.

மின்சாரம் வழங்கல் சட்டம் 1990 (சட்டம் 447) மற்றும் மின்சார ஒழுங்குமுறைகள் 1994 ஆகியவற்றின் கீழ் எரிசக்தி ஆணையத்திடமிருந்து செல்லுபடியாகும் உரிமத்தைப் பெறுவது அவசியம்.

முன்னதாக டிசம்பர் 31 ஆம் தேதி நடந்த சம்பவத்தில், ஜோகூர், தம்போயில் உள்ள கார் ஷோரூமில் மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடல் சார்ஜ் செய்யும் போது தீப்பிடித்தது.

“இது தொடர்பாக பொறுப்பான தரப்பு மற்றும் நிறுவனம் விசாரணைக்காக அழைக்கப்படும்,” என்று, எரிசக்தி ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதுடன், சம்பவத்தின் உண்மையான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here