வெற்றியின் வெளிச்சம் அமெரிக்காவில் தெரிகிறது

உலகமே எதிர்ப்பார்த்த அமரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற  ஜோ பைடன் பல இழுபறிக்களுக்கிடையில் அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.  தொடர்ந்து துணை அதிபரான கமலா ஹாரிஸ் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

முதன் முதலில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் அமெரிக்காவில் இறங்கியபோது சொன்ன வார்த்தை இந்தியா என்பதால் அமெரிக்க அமைச்சரவையில் இந்திய  வாடை  கொஞ்சம் தூகலாகவே வீசுவதாகக் கற்பனை செய்துகொள்ளும் நேரம்.

தர்மம்  உயிர்ப்போராட்டாம் நடத்தினாலும் இறுதியில் வெல்லும்  என்பதற்கு ஜோ பைடன் நல்ல உதாரணம். அதற்கு ஊக்கியாக அவரின் தேர்தல் வாக்குறுதிகள் விளங்குகின்றன.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலே வெற்றிக்கான வெளிச்சம் வீட்டுக் கதவை பிரகாசிக்கச் செய்யும். 

அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் கறுப்பர் போராட்டம் சூடு பிடித்திருந்த வேளையில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான கோபம் ஜோ வுக்கு வெற்றியாக அமைந்தது என்பதையும் மறுக்க முடியாது. அதனால்தான் கமலா ஹாரிஸ் என்ற கறுப்பு வம்சாவளியை அவர் வெற்றிக்குத் துணையாகப்பயன் படுத்திக்கொண்டார் என்றாலும் மறுப்பதற்கில்லை. அதே வேளை நியாயங்கள் பக்கம் என்றாலும் தகும்.

இது அரசியல் சாணக்கியம் என்றாலும், பாதகமற்ற, சூழ்ச்சியற்றதாகவே உணரப்படுகிறது. 

அமெரிக்காவை மீண்டும் உயரத்தில் நிறுத்த வேண்டும் என்று இருவருமே சபதம் கொண்டுள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்கதே!

ஆனாலும் இதற்கான முயற்சிகளில்  கோரோனாவின் எல்லை மீறிய கொடுமை அமெரிக்காவைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. 

இதைத்ததான் முதலில் கவனிக்க வேண்டும் என்று சொன்னாலும் பிறவற்றிலும் அதிக பொறுப்புகளும் மலைபோல் குவிந்துகிடக்கின்றன என்பதை ஜோ ஒதுக்கிவிடமாட்டார். அதற்கான நடவடிக்கைகளில் நிற பேதமற்ற அமெரிக்காவை அடையாளப்படுத்த வேண்டும் என்பது தலைக்குமேல் இருக்கிறது.

இதை, ஜோ நன்கு உணர்ந்திருக்கிறார். அதற்காண உந்து சக்தியாக  கமலா ஹாரிஸ் நிச்சயம் இருப்பார் இருக்க முடியும்.

கமலாவின் பூர்வீகம் இந்திய மாநிலம் என்பது பெருமை பேச்சாக இருக்க முடியும். அது இந்தியர்களுக்குப் பெருமையானதுதான். ஆனாலும் அவரால் அமரிக்காவின் விதிகளுக்குட்பட்டே அவரின் செயல்பாடுகளும் இருக்கும் என்பதால், அதிக முன்னுரிமையை இந்தியர்கள் எதிர்பார்க்கமுடியாது. பார்க்கவும் கூடாது.  

இப்படிப்பட்ட உணர்வுகள் அமெரிக்க ஆளுமையை அவர் பிரதிபலிக்கவே முடியாது என்பதையும் புரிந்துகொளவ்து நல்லது. அவரைப் பொறுத்தவரையில் மற்ற நட்பு நாடுகளைப் போலவே இந்தியாவும் ஒரு நாடுதான்.  இதில் புன்னகை மட்டுமே மாறுபட்டதாக இருக்கும்.

புதிய அதிபர் ஜோ பைடன் நன்கு அனுபவமிக்கவர். டொனால்ட் போல் அவசரக்காரர் அல்லர். மிகுந்த தூர நோக்கோடு சிந்திக்கின்றவர். டிரம்ப் காலத்தில் தவிர்க்கப்பட்ட பலவற்றை தூசித் தட்டிப் பார்க்கும் முயற்சியில் முதல் கையெழுத்தாக பாரிஸ் பசுமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் ஜோ. இந்த ஒப்பந்தம் முன்னாள் அதிபரால் நிராகரிக்கப்பட்டதாகும்.

இதுபோல், பகைமை நாடுகளாகக் கருதப்பட்ட நாடுகளுடன் கை கோக்கும் புதிய , மறு சீரமைப்புக்கும் நோக்கில் அதிபர் ஜோ பைடன் தயாராகிவருக்கிறார் என்பதும் வெகு விரைவில் புரிந்துவிடும். தேர்தல் வாக்குறுதிகளில் இவற்றை முன்பே  அவர் பட்டியலிட்டிருக்கிறார்.

எப்படிப்பார்த்தாலும் ஜோ பைடன் அவைவராலும் , அனைத்து நாடுகளாலும்  வரவேற்கக் கூடிய, நட்பு பாராட்டக்கூடிய மனிதராகவே இருப்பார். 

உலக வல்லரசு போட்டிகளில் சீனாவுடன் மோதுகின்றபோதுதான்  ஜோ எடுக்கும் முடிவு மாறுபட்டதாகவே இருக்கும். இதில்தான் உலகநாடுகளின்  கழுகுப்பார்வைகள் மாற்ருக்கருத்துய்களைக் கூறக்கூடும். அதேபோல வட கொரியா ஒத்துழைக்குமா என்பது மற்றுமொரு புதிர். வீம்புக்கு அடம்பிடித்தால் என்ன செய்ய முடியும்?

சீனாவின் நடவடிக்கை எப்போதுமே எதிர்விளைவுகளை உண்டு பண்ணுவதாகவே சமீப காலமாக இருந்து வருவதை ஜோ பைடன் அறியாமலில்லை. நட்பு கருதி கைகொடுக்கும்போது கும்பிடும் கைகளில் கூர் இருக்கிறதா என்பதை ஜோ பைடன் முதலில் உணரவேண்டும்.

அதற்காக இந்தியர்களின் பாரம்பரிய  வணக்க முறை பெரிதாகக் கைகொடுக்கும். தொற்றுக்கும் அஞ்ச வேண்டியதில்லை. இந்திய வணக்கம் முறை இப்போது அமரிக்காவுக்கு மிக அவசியமாகிவிட்டது.  

அமெரிகாவுக்கு முதன்மைத் தேவையாக இருக்க வேண்டிய நடவடிக்கைகளில் செலவே இல்லாத மனித இடைவெளிதான்.  அமெரிக்க அமைச்சரவையில் அதிகமான இந்தியர்கள் எப்போதுமே வனக்கத்திற்குரியவர்கள் என்பதால், இதை கமலா ஹாரிஸ் சிறப்பாகக் கையாள்வார் என்பதிலும் ஐயமில்லை.

கமலா ஹாரிஸ் இப்போது மாமியார் வீடான அமெரிக்காவில் இருப்பதால், அவர் அமெரிக்கர் என்பதாகத்தான் பொருள். அதனால் அவர் அமெரிக்கராகவே செயல்பட்டாலும் இந்தியா என்று வரும்போது அம்மா வீட்டின் பாசம் இல்லாமல் போகாது. அதனால், இந்திய அமெரிக்க நட்புறவு விருந்தினர் போலவே தொடர்ந்துவரும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்பதுபோல், ஜோ சிறந்த ஆளுமையை அமெரிக்க அதிபர் பதவியில் நிலை நாட்டுவார் என்பதை நிச்சயம் நம்பலாம்.

 

                                                     –சிற்பியன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here