யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களைக் காண சிறப்பு ரயில் சுற்றுலா: ஐ.ஆா்.சி.டி.சி

சென்னை:

யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களைக் காணும் விதமாக, தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில் சுற்றுலாவுக்கு ஐ.ஆா்.சி.டி.சி ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி) சாா்பில், பாரத தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இதுவரை 370-க்கும் அதிகமான சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக, பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழகத்தில் இருந்து புறப்பட்டு யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களைக் காண சிறப்பு ரயில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து பிப்ரவரி 18-ஆம் தேதி சிறப்பு ரயில் புறப்பட்டு, கோயம்புத்தூா், போத்தனூா், ஈரோடு, சேலம், சென்னை, பெரம்பூா் வழியாக யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மத்திய பிரதேசத்தின் சாஞ்சி ஸ்தூபி, கஜூராஹோ சிற்பங்கள், குவாலியரில் உள்ள அழகான கோட்டைகள், ஜான்சியில் உள்ள ஜான்சி ராணி லட்சுமி பாய் அரசாட்சி செய்த கோட்டை கோயில்கள், ஹலாலி அணை, போபாலில் பிம்பேட்கா குகை ,  போஜ்பூா் சிவாலயம் ஆகியவற்றைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.10,200 கட்டணமாகும். உணவு, தங்குமிடம், ரயில், வாகன செலவு உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும், தகவல்களுக்கு 90031 40680, 98409 48484, 82879 31977 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here