ஒரு டன் பூக்களால் கோயிலில் அலங்காரம்

பழநி – தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநி முருகன் மலைக்கோயில் உட்பிரகாரம் பாரவேல் மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.தைப்பூசத்தை முன்னிட்டு பழநி புஷ்பகைங்கர்ய சபா சார்பில் நேற்று மலைக்கோயில் உட்பிரகாரம் பாரவேல் மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.மஞ்சள்,
பலவகை மலர்கள், பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பெங்களூர், நிலக்கோட்டை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து மலர்கள் கொண்டு வரப்பட்டன.
இவற்றுடன் செவ்வந்தி, மல்லிகை, ரோஜாப்பூக்கள் மலைக்கோயில் உட்பிரகாரத்தில் பலவண்ணப்பூக்களில் வேல், ஓம் சரவணபவ, மயில் போன்ற ரங்கோலிகள் வரையபட்டிருந்தன.
இந்த அலங்காரத்திற்காக ஒரு டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டது.ஏற்பாடுகளை பழநி புஷ்பகைங்கர்ய சபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here