சசிகலாவைக் கைதுசெய்ய பச்சைக்கொடி

இன்று  பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகிவருகிறார்கள். இதற்கிடையே, அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்திய சசிகலாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று டி.ஜி.பி-யிடம் அமைச்சர்கள் புகாரளித்திருக்கிறார்கள். இந்தப் புகாரின் அடிப்படையில், பிப்ரவரி 8ஆம் தேதி, ஓசூர் வழியாக சசிகலா என்ட்ரி ஆகும்போது, அவர் வாகனத்தில் அ.தி.மு.க கொடி இருந்தால், அதை அகற்றுவதற்கு காவல்துறை தயாராகிறதாம்.

சசிகலா காரில் அ.தி.மு.க கொடிசசிகலா காரில் அ.தி.மு.க கொடி

சில இடங்களில் அ.தி.மு.க கொடியை சசிகலா ஏற்றிவைக்கவும் கொடிக்கம்பங்கள் தயாராகின்றன. `இது மாதிரி நிகழ்வுகளை அனுமதிக்கக் கூடாது’ என்று முதல்வர் அலுவலகத்திலிருந்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவுகள் பறந்திருக்கின்றன. இதையும் மீறி சசிகலா கொடியேற்றினால், அதைத் தடுத்து நிறுத்தும்படி கட்சிப் பிரமுகர்களுக்கும் தனியாகத் தகவல்கள் போயிருக்கின்றன. இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை வந்தால், அதைவைத்து சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவரைக் கைதுசெய்யவும் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here