ஓட்டத்தின் போது அநாகரீகமாக ஆடை அணிந்ததற்காக இந்திய, தைவான் நாட்டவருக்கு தலா 5,000 ரிங்கிட் அபராதம்

கோத்தா திங்கி: கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பான் ஆசியா இன்டர்நேஷனல் ஓட்டத்தின் போது பொது இடங்களில் அநாகரீகமான ஆடைகளை அணிந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு வெளிநாட்டவர்களுக்கு தலா  5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத்தை செலுத்த தவறினால் 1 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, முறையே 66 மற்றும் 70 வயதான ஆர்தர் வாங் மற்றும் சத்தியநாராயண பிரசாத் பாபோலி ஆகியோருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நூர்கலிதா ஃபர்ஹானா அபு பக்கர் தண்டனை விதித்தார். தைவான் பிரஜையான வாங் அவர்களுக்கு மாண்டரின் மொழியிலும், இந்தியப் பிரஜையான சத்யநாராயணாவுக்கு ஆங்கிலத்திலும் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

ஓய்வு பெற்றவரும் ஆர்வலருமான வாங், பெங்கராங்கில் உள்ள ஜாலான் உத்தாமா ஜாலான் டேசாருவில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை குற்றத்தைச் செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். முன்னாள் வழக்கறிஞர் சத்தியநாராயணா, அதே மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோட்டல் வளாகத்தில் ஒரே நேரத்தில் குற்றத்தைச் செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர்கள் இருவர் மீதும் குற்றவியல் சட்டத்தின் 294 (a) பிரிவின் கீழ் பொது இடங்களில் ஆபாசமான செயல்களைச் செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

முன்னதாக, துணை அரசு வழக்கறிஞர் அப்துல் கஃபர் அப் லத்தீப்,  வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் மக்களுக்கும், நாட்டின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப ஆடை அணிவதை ஒரு பாடமாக இருவருக்கும் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதிக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

வாங் தனக்குப் பரிச்சயமில்லாத மற்றும் நாட்டின் கலாச்சாரத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாத காரணத்திற்காக ஒரு மென்மையான தண்டனைக்கு மேல்முறையீடு செய்தார். தைவானில் உள்ள ஆர்க்கிட் தீவைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் பாரம்பரிய உடைகள் தான் அணிந்திருந்ததாகவும், அந்த கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக தான் அணிந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நாட்டு மக்களை புண்படுத்திய இந்த தவறுக்காக நான் மலேசிய அரசாங்கத்திடமும் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன் என்று அவர் கூறினார். சத்யநாராயணாவும் மன்னிப்பு கேட்டு, தனக்கு ஏற்கனவே 70 வயதாகிறது என்றும் மருத்துவராக பணிபுரியும் மனைவி இருப்பதாகவும் மேலும் ஒரு தொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கு வந்துள்ளேன் என்ற அடிப்படையில் அபராதத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்ததாக  தெரிவிக்கப்பட்டது. 39 முதல் 70 வயதுக்குட்பட்ட உள்ளூர் மற்றும் இரண்டு வெளிநாட்டவர் ஆகிய மூவரும் இரவு 10 மணியளவில் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஓட்டத்தின் போது தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார். சிவப்பு சேலை, சிவப்பு பாவாடை,  கட்அவுட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here