குழந்தைகள் நலம் காக்கும் தொட்டில் சேவைகள்

குழந்தையின் சிரிப்பில் இறைவன் இருப்பதாகக் கூறப்படும் வார்த்தைக்கு இப்போதெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விடுகிறது என்றால் ஒப்புக்கொள்வாரா? 

ஒப்புக்கொள்வதில் சற்று தாமதம் நேரலாம். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வோர் ஆண்டும் 100க்கும் அதிகமான குழந்தைகள் குப்பையில் வீசப்படுகின்றன என்ற வருத்தமான செய்தி பொய்யல்ல என்று இருக்கும்போது குழந்தைகள் தெய்வத்திற்கு ஈடானவர்கள் என்று எப்படித்தான் கூறமுடியும்?

வீசப்படுகின்ற குழந்தைகளில் பகுதியினர் இறந்த குழந்தைகளாகப்  பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மற்ற குழந்தைகள் உள்ளபடியே  இரைக்கு ஆளான இறைவனின் குழந்தைகள் என்றால் மிகையில்லை. 

இதுபோன்ற கைவிடப்படும் குழந்தைகளைக் காப்பாற்ற தொண்டு இயக்கம் ஒன்று இறையகம் போலவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

இத்தொண்டு இயக்கத்தை தொட்டில் குழந்தை இயக்கம் என்று நாம் கூறிக்கொள்ள முடியும். 

அரசின் பார்வையில் செயல்படும் இத்தொண்டு அற்வாரியத்தின் சேவை மதிக்கப்படக்கூடியது . தொட்டிலுக்குப் பதில் அனைத்து வசதிகளுடன் கூடிய கூண்டு என்றும் இதைக் கூறமுடியும். 

குப்பையில் எறிவதற்குக் குழந்தைகளகொன்ரும் எச்சில் கழிவுகள் அல்லர். கைவிடத்தான் வேண்டும் என்ற நிலையில் இருந்தால், அக்குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக அமைக்கப்பட்ட இடம்தான் இந்த கூண்டு. இக்கூண்டில் சேர்க்கப்படும் குழந்தைகள் கடவுள் போல் காப்பாற்றப்படுகின்றன. 

போதுமான மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகின்றன. பராமரிக்கப்படுகின்றன. அக்குழந்தை பிறப்பின் காரணம் அறிந்து , அதற்கான  நிவாரணம் அளிக்கப்படுகிறது. அடையாளம் தெரியாமல் போனால் மருத்துவப்பரிந்துரைகளுக்கு ஏற்ப, தகுந்த மாற்றுத் தாய்மார்களிடம்  ஒப்படைக்கப்படுகின்றன. 

குழந்தையைப்  பிரசவித்துவிட்டு தொப்புள்  கொடியுடன் வீசுவது மிகப்பெரிய குற்றம், ஆனாலும் குற்றங்கள் நிதானமாகத் தீர்மானிக்கபட்டு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன என்கிறார் இதன் அறவரியத்தலைவரான டத்தின் படுக்கா சே அஸ்மா இப்ராஹிம்.

நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக பெட்டாலிங் ஜெயா. ஜோகூர் பாரு, கெடா, சுங்கை பட்டாணி ஆகிய பகுதிகளில்  கைவிடப்படும்  அல்லது வீசப்படும்  குழந்தைகளுக்கான தொட்டில் அறவாரியம் செயல்படுகிறது. 

இதற்கான சுகாதார பொறுப்பை கே.பி.ஜே நிபுணத்துவ மருத்துமனை ஏற்றுக்கொண்டிருப்பதே அறவாரியத்தின் சிறப்பாகும்.

குழந்தைகள், அரவணைப்புடன்  அன்பான குடும்பத்தில், ஆரோக்கிய சூழலில் சேர்க்கப்படவேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.

இதில் முக்கியமான சிக்கலும்  இருக்கிறது. குழந்தையின் உண்மைப் பிறப்பு அறியப்படாவிட்டால் பிறப்புச் சான்றிதழ் பிரச்சினை எழுவதாகவும் டத்தின் கூறுகிறார்.

இந்த குழந்தைகலின் தொட்டில் அறவாரியம் தொடங்கி 10 ஆண்டுகளாகிவிட்டன என்பது மலைப்பான செய்தி.  இதுவரை 437 குழந்தைகளின் நிலை மாற்றம் அடைந்திருக்கிறது. 267 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. 158 குழந்தைகள் பெற்ற அன்னைமார்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. 12 குழந்தைகள் சமூக நலத்துறையிடம் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

கடந்த ஆண்டில் 45 குழந்தைகளில் 9 குழந்தைகள் தொட்டில் கூண்டில் வைக்கப்பட்டவை. 36 குழந்தைகள்  குழந்தைகளுக்காகக்  காத்திருக்கும் தாய்மார்களிடம் ஒப்படைக்கப்பட்டவை என்றும் டத்தின் சே அஸ்மா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here