குக் வித் கோமாளி நடிகை ஷாக்

             அரசியல் சர்ச்சையில் சிக்க வைத்தது யார்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெயர் பெற்ற சிவாங்கி தான் ட்விட்டரில் #GobackModi என்ற ஹேஷ்டேக் பயன்படுத்த வில்லை என்றும், ட்விட்டர் தளத்தில் தனக்கு அக்கவுண்ட் இல்லை என்றும் தெரிவித்தார்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக சென்னை வந்தார். அதன் காரணமாக, ட்விட்டரில் #GobackModi என்ற ஹேஷ்டேக் வைரலானது.

நேற்று, sivaangikrish என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து #GobackModi என்று ட்வீட் செய்யப்பட்டது. சுமார், 11,000 க்கும் மேற்பட்ட தொடர்பினர் உள்ளனர். இந்த கணக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை சிவாங்கி தான் #GobackModi என்று ட்வீட் செய்ய வில்லை, ட்விட்டரில் தனக்கு கணக்கு இல்லை என்றும் தெளிவுபடுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குக் வித் கோமாளி ஷோவில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த போட்டியாளர் என்றால் அது பாடகர் சிவாங்கி தான். அவர் தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் இந்த ஷோடிவில் ஒரு மேதையாகவும் மாறிவருகிறார்.

இந்நிலையில், அண்மையில் எபிசோடில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் சிவாங்கியின் நகைச்சுவை திறனை பாராட்டினார். மேலும் சிவாங்கியின் பெரிய ரசிகர் என்பதை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here