5 நாளில் 500 கோடி! ஜெயிலரை முந்துகின்ற லியோவின் வசூல் சாதனை!

வெளியான முதல் நாள் முதல் உலகெங்கும் அதிக வசூலை அள்ளிக் குவித்தது. மலேசி யாவின் திரையங்குகளையும் அதிரவைத்தது.

கமல்ஹாசனின் விக்ரம், பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள், ஜெயிலர் மற் றும் லியோ என தொடர்ந்து தமிழ் சினிமாவின் வளர்ச்சி சர்வதேச மார்க்கெட்டில் உயர்ந்து கொண்டே செல்வது தமிழ் சினிமாவுக்கான வளர்ச்சி தான் என கொண்டாடி வருகின்றனர்.

டைட்டானிக் பட ஹீரோவான பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் கிங் மேக்கர் மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கிய Killers of the Flower Moon படத்தின் வசூலையே லியோ முதல் வாரத்தில் முந்திய நிலையில், வெரைட்டி உள் ளிட்ட சர்வதேச ஊடகங்கள் விஜய்யின் லியோ படத்தை பாராட்டி எழுதியுள்ளனர்.

தமிழ்நாட்டில் லியோ திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டிய நிலையில், இந்தியா முழுவதும் 200 கோடி வசூலை 5 நாட்களிலேயே விஜய் அள்ளி அசுர சாதனை படைத் திருப்பதாக கூறுகின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளில் படம் அசத்தி வருவது தான் இளை ஞர்களை அதிகப்படியாக தியேட்டருக்கு கொண்டு சென்றுள்ளது என்றும் ஹைனா சீன் மற்றும் குடும்பத்துக்காக போராடும் நாயகன் கதை என்பதால் இந்த ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை ரசிகர்கள் குடும்பத்துடன் லியோவை பார்த்து கொண்டாடி வருகின்றனர் எனக் கூறுகின்றனர்.

முதல் 4 நாட்களில் 405 கோடி வசூல் ஈட்டிய நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் 5வது நாளான நேற்று அதிகப்படியாக 70 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாகவும் ஒட்டுமொத்தமாக 475 கோடி வசூலை லியோ வசூலித்து 500 கோடி கிளப்பில் இன்றைய வசூலுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய வசூலுடன் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூலை லியோ முறியடிக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால், தயாரிப்பு நிறுவனம் முதல் நாள் வசூலை தவிர மற்ற நாட்களின் வசூல் விவரத்தை இதுவரை வெளியிடவில்லை. இன்று அல்லது நாளை வசூல் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here