சென்னையில் உற்பத்தி ஆலையை நிறுவும் அமேசான்!

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் சென்னையில் தனது உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறிவனம் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனம் அமெரிக்காவில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர், சி இ ஓ உலக பணக்காரர் பட்டியலில் முன்னணியில் உள்ளார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள அமேசான் நிறுவனம் சில எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தியும் செய்கிறது. அந்த வகையில் இப்போது சென்னையில் தங்கள் உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here