மலேசியா, சென்னை இடையே கூடுதல் விமான சேவை

மலேசியாவிலிருந்து சென்னைக்கு கூடுதல் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் விமான சேவையை பாத்திக் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இந்தச் சேவை கோலாலம்பூரில் இருந்து நாள்தோறும் மாலையில் புறப்படும் பாத்திக் நிறுவனத்தின் போயிங் ரக விமானம், உள்ளூர் நேரப்படி இரவு 10.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையும்.

அதன் பின்னர் இரவு 11.15 மணிக்கு அதே விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு மலேசியாவுக்கு வரும்.

இது போயிங் விமானம் என்பதால் ஒரே சமயத்தில் அதில் 189 பயணிகள் வரை பயணம் செய்ய இயலும்.

நாட்டில் சுற்றுலாத்துறை தலைதூக்கியதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.

தற்போது கோலாலம்பூர், சென்னை இடையே நாள்தோறும் ஐந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஏர் ஏசியா, இண்டிகோ, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த விமானங்களை இயக்குகின்றன.

தற்போது அதில் பாத்திக் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

விமானச் சேவை அதிகரித்திருப்பது சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here