துப்பாக்கி முனையில்… பள்ளியில் இருந்து 42 பேர் கடத்தல்

நைஜீரியாவில் பயங்கரம்…

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பள்ளியில் இருந்து மாணவர்கள் உட்பட 42 பேர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அபுஜா:

.ஆப்பிரிக்காவில் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக இருப்பது நைஜீரியா. இருப்பினும், தீவிரவாதம் என்பது இந்நாட்டின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. வடமேற்கு, மத்திய நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், மத்திய நைஜீரியாவின் காகரா என்ற ஊரில் அமைந்துள்ள பள்ளிக்குள் இன்று பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதி ஒருவர் நுழைந்துள்ளான். அந்தத் தீவிரவாதி துப்பாக்கி முனையில் அங்கிருந்த 27 மாணவர்கள், மூன்று ஆசிரியர்கள் உள்ளிட்ட 42 பேரை கடத்தியுள்ளான். இத்தகவலை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

மேலும். இதில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நைஜீரிய அரசு அறிவித்துள்ளது. மேலும், பயங்கவராதி பள்ளிக்கு நுழைந்தபோது அங்கு சுமார் 650 மாணவர்கள் இருந்ததாகவும் மற்றவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் கடத்தப்பட்டுள்ள இந்தச் சம்பவத்திற்கு அந்நாட்டின் அதிபர் புஹாரி கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட மாணவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கப் பாதுகாப்புப் படையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, இரண்டு மாதங்களுக்கு முன் நைஜீரியாவின் கட்சினா மாகாணத்தில் உள்ள பள்ளியிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டனர். அரசுடனான பேச்சுவார்த்தை பின்னர் அவர்கள் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்.

நைஜீரியாவில் மாணவர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here