மசாஜ்க்கு சென்ற இந்தியரிடம் ரூ.55,30,806 சுருட்டல்

    –துபாயில்  பெண்களின் கைவரிசை  !

துபாயில் டேட்டிங் அப்ளிகேஷனில் விளம்பரம் ஒன்று பரவியுள்ளது. அழகான பெண்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் அந்த விளம்பரத்தில் தங்களது பார்லரில் இப்பெண்கள் மூலம் மசாஜ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் குறைந்த கட்டணம் தான் எனவும் அதாவது துபாய் மதிப்பில் 200 திர்ஹாம் தான் (இந்திய மதிப்பில் ரூ.3,950) கட்டணம் என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த விளம்பரத்தை நம்பி சென்ற இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெண்களிடம் பெரும் தொகையை பறிக்கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விளம்பரத்தை பார்த்த 33 வயது இளைஞர் அதில் குறிப்பிட்ட தொலைப்பேசி எண்ணுக்கு கால் செய்து பேசியுள்ளார். மறுமுனையில் இனிமையான குரலில் பேசிய பெண் Al Refaa என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து இளைஞரும் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று மசாஜ் சென்டருக்குள் புகுந்துள்ளார். மறுநிமிடமே கதவை பூட்டிய பெண்கள் அவரை மிரட்டத் தொடங்கினர். அங்கு ஆப்பிரிக்க பெண்கள் 4 பேர் இருந்துள்ளனர். அவர்கள் 4 பேரும் இளைஞரை பிடித்து மிரட்டிp பணம் பறிக்க திட்டம்போட்டது அதன்பின்னர் அவருக்கு தெரியவந்தது.

அவரை சேரில் பிடித்து இருக்கவைத்து கத்தி முனையில் அவரது செல்போன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அப்பெண்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்குமாறு மிரட்டியுள்ளனர். அதே நேரத்தில் மற்றொரு பெண் அவரின் கிரெடிட் கார்டை எடுத்து அதில் இருந்த 30,000 திர்ஹாம் பணத்தை எடுத்துள்ளார். (இது இந்திய மதிப்பில் 5,92,586 லட்சம் ரூபாயாகும்).

மேலும் அவரை மிரட்டி 250,000 திர்ஹாம் பணத்தை அவர்களின் பல்வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இதன் இந்திய மதிப்பு 49,38,219 லட்ச ரூபாயாகும். பின்னர் அவரின் ஐபோனையும் பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து துரத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் உடனே துபாய் போலீசாரிடம் புகார் அளித்தார். இளைஞரின் புகாரின் அடிப்படையில் அவரை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரியாவைச் சேர்ந்த 3 பெண்கள் தப்ப முயன்றபோது ஷார்ஜாவில் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் ஒருவர் தலைமறைவாக இருக்கிறார். இந்த சம்பவம் துபாயில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here