இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ‘கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ரோலிங் ஹில்ஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 7.12 மணியளவில் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உட்ஸின் கார் பலத்த சேதம் அடைந்தது.
டைகர் உட்ஸின் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று செய்தி வெளியானது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் உட்ஸ் கோல்ப் விளையாட்டில் 15 முறை சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றவர். உட்ஸ் கடைசியாக 2019ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல கோல்ப் வீரரான டைகர் உட்ஸ் விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்களைக் கவலையடையச் செய்துள்ளது.