-குடியுரிமை தேர்வு முறையில் மாற்றம் – ஜோ பைடன்
இந்த நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதைக் குறைக்க குடியுரிமை தேர்வு முறைகளை கடுமையாக்கியது. 2008- ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகளை மாற்றியது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள், கொள்கைகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறார். அந்தவகையில் குடியுரிமை தேர்வில் முந்தைய நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அதன்படி இனி 2008- ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகள் மீண்டும் தொடரும் எனவும் இது மார்ச் 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக அளவில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் 2- ஆவது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.