லீ சியன் யாங்கிற்கு எதிராக அமைச்சர்கள் அவதூறு வழக்கு

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் ரிடவுட் ரோடு பங்களா விவகாரம் தொடர்பில் லீ சியன் யாங்கிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுத்து இருக்கிறார்கள்.

லீ சியன் யாங், சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் இளைய புதல்வர். இப்போதைய பிரதமர் லீ சியன் லூங்கின் சகோதரர்.

சிங்கப்பூர் நீதிமன்றங்களின் இணையத்தளத்தில் இடம்பெற்று இருக்கும் விசாரணைக்கு வரவிருக்கின்ற வழக்குகளின் பட்டியலைப் பார்க்கையில், இந்த வழக்குக்கு முந்தைய வழக்கு செப்டம்பர் 5ஆம் தேதி இடம்பெறும் என்று தெரிகிறது.

இந்த அவதூறு வழக்கில் தவீந்தர் சிங் சேம்பர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு இரண்டு அமைச்சர்களையும் பிரதிநிதிக்கிறது.

ரிடவுட் ரோட்டில் இருக்கும் இரண்டு பங்களாக்களைத் தாங்கள் வாடகைக்கு எடுத்து இருப்பதன் தொடர்பில் பொய் புகார்களை லீ சியன் யாங் தெரிவித்து இருக்கிறார் என்றும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்போவதாகவும் இரண்டு அமைச்சர்களும் ஜூலை 27ஆம் தேதி தெரிவித்து இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here