–சர்வதே விருதால் வைரமுத்து நெகிழ்ச்சி
சென்னை:
என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘சீயான்கள்’ – ஆகிய திரைப்படங்களுக்கு சர்வதேச திரைப்பட விருதுகள் கிடைத்திருப்பதை குறிப்பிட்டு கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ‘என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’ ஆகிய இரு படங்களுக்கும் வைரமுத்து பாட்டெழுதி இருந்தார்.
18வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சிறந்த நடிப்புக்கான விருது வழங்கப்பட்டது. இதேபோல் சியான்கள் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சண்முகசுந்திரத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கிடைதுத்துளளது. என்றாவது ஒரு நாள் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
இதனை வாழ்த்தி பிரபல சினிமா பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள டவீட் பதிவில்,
‘என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’,‘சீயான்கள்’ – ஆகிய திரைப்படங்கள் சர்வதேச விருது கொண்டது பெருமிதம் தருகிறது.
முதலிரு படங்களுக்கு நான் பாட்டெழுதிப் பங்கு செலுத்தியது பரவசம் தருகிறது.
விரைக தமிழர்களே! இனி
அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்.