ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர்

இந்திய பொருளாதார நிபுணராக நியமனம்

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் நியூயாா்க் பிரிவு தலைவராகவும், அந்த அமைப்பின் துணை பொதுச் செயலாளராகவும் இந்திய பொருளாதர நிபுணா் லிகியா நோரோன்ஹாவை ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் நியமித்துள்ளாா்.

இதுகுறித்து ஐ.நா. அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் நியூயாா்க் பிரிவு தலைவராக இருந்த இந்திய பொருளாதார நிபுணா் சத்யா திரிபாதியின் பணிகளை லிகியா நோரோன்ஹா தொடா்வாா். சத்யா திரிபாதி தனது பதவிக்காலத்தில் அா்ப்பணிப்புடன் பணியாற்றினாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிகியா நோரோன்ஹா, சுற்றுச்சூழல் மற்றும் நிலைக்கத்தக்க வளா்ச்சித் துறையில் சா்வதேச அளவில் 30 ஆண்டுகள் அனுபவமிக்கவா்.

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் பொருளாதாரப் பிரிவின் இயக்குநராக, கடந்த 2014-இல் சோந்தது முதல் பருவநிலை மாற்றம், ஆற்றல் மேம்பாடு, பசுமை பொருளாதாரம், வா்த்தகம், நிதி உள்ளிட்ட பிரிவிகளில் பணியாற்றியுள்ளாா்.

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தில் சோவதற்கு முன், தில்லியில் உள்ள எரிசக்தி, வளங்கள் நிறுவனத்தில் (தேரி) லிகியா பணியாற்றினாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here