நைஜீரியாவில் பயங்கரவாதம்

 –300-க்கும் மேற்பட்ட மாணவிகள்  கடத்தல்.!

இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள், வகுப்புகளுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் மாணவிகளை சிறை பிடித்துள்ளனர்.
பயங்கரவாதிகளின் அட்டகாசம் பல இடங்களில் பெருகி வரும் நிலையில், நைஜீரியாவில் உள்ள போகோ ஹராம் பயங்கரவாதிகள் அங்கு வாழும் கிராமத்து மக்கள் மத்தியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.
இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பது மட்டுமல்லாமல், பள்ளிக்க்ச் செல்லும் மாணவ மாணவிகளையும் கடத்தி சென்று அவர்களைத் தற்கொலைப் படை பயங்கரவாதிகளாகவும் மாற்றிவிடுகின்றன.
இந்நிலையில் நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.வழக்கம் போல், நேற்று முன்தினம் மாலை பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள், வகுப்புகளுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் மாணவிகளை சிறை பிடித்துள்ளனர்.
இந்த செயலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சில ஆசிரியர்களும் மாணவர்களும் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, அங்கு உள்ள காட்டுக்குள் சென்று மறைந்துள்ளனர். இந்நிலையில், பயங்காரவாதிகள் லாரிகளை வரவழைத்து மாணவிகளை ஏற்றிக் சென்றுள்ளனர்.
இது குறித்து பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டதாகவும், ஜங்கேபே கிராமத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு கடத்தி செல்லப்பட்ட மாணவிகளை மீட்பதற்கான பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நைஜீரியாவின் காட்சினா மாகாணத்தில் டிசம்பர் மாதம் இதே போன்று 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here