அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் தென்மேற்கு பகுதியில் உள்ள மெக்கென்சி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்ட வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.